LOADING

Type to search

நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதமாக மாறும் மாம்பழம்.

Tamil Articles

நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதமாக மாறும் மாம்பழம்.

Dr. S.B Praveen April 15, 2020
Share

முக்கனிகளுள் முதன்மைக் கனியாக விளங்கும் மாங்கனியை விரும்பாதோர் வெகுசிலரே இருக்கமுடியும். அப்படி அனைவராலும் விரும்பப்படும் மாங்கனி பல மருத்துவ பயன்களை உள்ளடக்கியது என்பது நாம் அறிந்ததே. ஆனபோதிலும் நீரிழிவு நோயாளிகள் அதன் அதிக இனிப்பு சுவை காரணமாக அதைத் தவிர்க்க வேண்டி வந்தது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று மாம்பழம் நீரிழிவு நோய்க்கு நேர்மறையான விளைவுகளை தரவல்லது என்பதை உறுதிசெய்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் உயிரியல் ஆராய்ச்சி அமைப்பான (Federation of American Societies for Experimental Biology) தனது கட்டுரையில் இதனை உறுதி செய்துள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது நடந்த ஆராய்ச்சி ஒன்று மாம்பழத்தில் உள்ள இந்த நேர்மறையான விளைவுகளை தரும் மூலக்கூறையும் கண்டறிந்துள்ளது இதனை விஞ்ஞானிகள் மாஞ்சிபெரின் (Mangiferin) என்று பெயரிட்டுள்ளனர். இந்த மூலக்கூறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன் உடல் செல்களின் இன்சுலின் உணர்திறனையும் (Insulin Sensitivity) அதிகரிக்கவல்லது என கண்டறியப்பட்டுள்ளது.

” அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”

மாம்பழம் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் துணை புரியும் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கும்போதிலும். சர்க்கரை நோயாளிகள் மிதமான அளவிலேயே இப்பழத்தை உண்ணவேண்டும். தினமும் ஒரு கப் அளவு மட்டும்  மாம்பழத்தை சேர்த்து பருகி வருவது சிறப்பு. இதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் ஒரேநேரத்தில் அதிக அளவு உண்பதை தவிர்க்கவும்.

இந்தியாவின் தேசிய கனி, முக்கனிகளில் முதல் கனி, கனிகளின் அரசன், தெய்வீகக்கனி என்று பல சிறப்பு பெயர்களுடன் விளங்கும் மாங்கனியை அளவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

வாழ்க வளமுடன்.


Reference:

1. https://pubmed.ncbi.nlm.nih.gov/15740886/

2. Daud, Noor Huda, et al. “Mango extracts and the mango component mangiferin promote endothelial cell migration.” Journal of agricultural and food chemistry 58.8 (2010): 5181-5186.

Dr. S.B Praveen

Dr. Praveen is an Indian Physician and Psychologist. In view of providing holistic health care he extend his knowledge in Acupuncture, Yoga, Meditation, herbal medicines & behavioral therapies thereby helping his patients get over chronic health conditions and lead a fruitful life.

  • 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *